தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. மதுரையில் திமுகவினர் பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
மதுரை, கள்ளிக்குடி திமுக மாவட்ட கவுன்சிலர் சரவண பாண்டியன், திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திமுக இளைஞரணியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரும் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
மேலும் மதுரையில் மு.க. அழகிரியின் ஆதரவாளராக அறியப்பட்ட முன்னாள் துணை மேயர் மன்னன் நேற்று அதிமுகவில் இணைந்த நிலையில், தற்போது திமுகவினர் பாஜகவில் இணைந்துள்ளது அக்கட்சிக்கு அடுத்த இழப்பாகப் பார்க்கப்படுகிறது.
