தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகையான சோபிதா துலிபாலா, சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா உலகின் பப்ளிசிட்டி கலாச்சாரம் குறித்து மிக வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
“எப்போதும் செய்திகளில் இடம்பிடிக்க வேண்டும் அல்லது எல்லார் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்ற ஆசை எனக்குக் கிடையாது” எனத் தனது மனக்குமுறலை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, பாலிவுட்டில் நிலவும் அதீத பிஆர் (PR) வேலைகளில் தனக்குத் துளியும் உடன்பாடில்லை என்றும், 24 மணி நேரமும் தான் கேமரா முன்னால் இருக்க வேண்டும் எனத் தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அமைதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரிவித்த சோபிதா, “எனது வேலையைப் பற்றி மட்டும் மக்கள் பேசினால் போதும், விளம்பரத்திற்காக எதையும் செய்ய மாட்டேன்” என அதிரடியாகக் கூறியுள்ளார்.
ஏற்கனவே நாக சைதன்யாவுடனான திருமணப் பேச்சுகள் அடிபட்டு வரும் நிலையில், சோபிதாவின் இந்த ‘பிரைவசி’ குறித்த பேச்சு இப்போது டோலிவுட் வட்டாரத்தில் செம ஹாட் டாபிக் ஆகியுள்ளது.
