பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றாலும், மைதானத்தில் சக வீரரிடம் ஹர்திக் பாண்டியா நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிருப்தியடைந்துள்ள தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், அவருக்கு மாற்றாக இளம் வீரரை தயார் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் 18-ஆவது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அப்போது ஷஹீன் அப்ரீதி கொடுத்த கேட்ச் வாய்ப்பை குல்தீப் யாதவ் தவறவிட்டதுடன், அது சிக்ஸராகவும் மாறியது. போட்டி இந்தியாவின் வசம் இருந்தபோதிலும், விக்கெட் கிடைக்காத ஆத்திரத்தில் ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவை கடுமையாகச் சாடினார்.
போட்டி முடிந்த பிறகு சக வீரர்கள் கைகுலுக்கிக் கொண்ட போது, சமாதானம் செய்ய வந்த குல்தீப்பை ஹர்திக் உதாசீனப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மூத்த வீரரின் இத்தகைய நடத்தை பயிற்சியாளர் கம்பீருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக 18 வயதான இளம் ஆல்ரவுண்டர் திபேஷ் தேவேந்திரனை அணியில் இணைக்க கம்பீர் திட்டமிட்டுள்ளார். இந்திய யு-19 அணியில் ஜொலித்து வரும் இவரது புள்ளிவிவரங்கள் நம்பிக்கையளிக்கும் விதமாக உள்ளன அதனபடி லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 15 போட்டிகளில் 650 ரன்கள் (1 சதம், 5 அரைசதம்) மற்றும் 20 விக்கெட்டுகள். டி20 போட்டிகளில் 10 போட்டிகளில் 250 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டுகள். டெஸ்ட் போட்டிகளில் 5 போட்டிகளில் 170 ரன்கள் மற்றும் 10 விக்கெட்டுகள் (சிறந்த பந்துவீச்சு: 5/60) போன்றவைகளாகும்.
ஹர்திக் பாண்டியா அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக இருந்தாலும், ஒழுக்கமற்ற செயல்களை கம்பீர் விரும்புவதில்லை. எனவே, 2026 டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு ஹர்திக்கை மெல்ல மெல்ல ஓரங்கட்டிவிட்டு, மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) திபேஷ் தேவேந்திரனை ஒரு முழுநேர ஆல்ரவுண்டராக உருவாக்க கம்பீர் பிசிசிஐ கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் திபேஷை அறிமுகப்படுத்தி, படிப்படியாக மற்ற போட்டிகளுக்கும் அவரைத் தயார் செய்யத் தலைமை பயிற்சியாளர் திட்டமிட்டுள்ளார்.
