இந்தியா முழுவதும் இன்று இரவு 7 மணி முதல் எலான் மஸ்கிற்குச் சொந்தமான எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளம் திடீரென முடங்கியுள்ளது. எக்ஸ் செயலியை ஓபன் செய்தால் ஸ்கிரீன் முழுக்க பிளாங்க் ஆக வருவதும், டைம்லைன் அப்டேட் ஆகாமல் இருப்பதும் பயனர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு என முக்கிய நகரங்களில் உள்ள லட்சக்கணக்கான பயனர்கள் எக்ஸ் தளத்தைப் பயன்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். சர்வர் கோளாறு அல்லது தொழில்நுட்பக் குறைபாடு காரணமாக இந்த முடக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

எக்ஸ் தளம் முடங்கியதைத் தொடர்ந்து, பயனர்கள் மற்ற சமூக வலைதளங்களில் ‘X Down’ எனப் பதிவிட்டுத் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இன்னும் சில மணி நேரங்களில் இந்தச் சிக்கல் சரியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.