தென்னிந்திய திரையுலகின் ‘மோஸ்ட் வான்டட்’ ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வமற்ற ஆனால் அதிரடியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல ஆண்டுகளாகத் தங்களது காதலை “நாங்க ஜஸ்ட் பிரண்ட்ஸ் தான்” எனச் சொல்லி மறைத்து வந்த இந்த ஜோடி, வரும் பிப்ரவரி 26-ம் தேதி (26.02.26) ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு பிரம்மாண்ட அரண்மனையில் ரகசியமாகத் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி (Reception) மார்ச் 4-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாம். இது தொடர்பான திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் லீக் ஆகி காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

அந்தப் பத்திரிகையில், “உற்றார் உறவினர்கள் முன்னிலையில் சிறிய அளவில் திருமணம் நடைபெறுகிறது, மார்ச் 4-ல் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்குத் தவறாமல் வந்துவிடுங்கள்” என விஜய் தேவரகொண்டா அழைப்பு விடுத்துள்ளார்.

கீதா கோவிந்தம் படத்தில் தொடங்கிய இவர்களது காதல் கதை, இப்போது நிஜ வாழ்க்கையிலும் கைகோர்க்கப் போவதை அறிந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.