புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டத் தலைவர் பர்வேஸ் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, அண்மையில் தவெக தலைவர் விஜய் பற்றி நயினார் நாகேந்திரன் விமர்சித்ததற்குத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார். “பொதுவெளியில் எப்படிப் பேச வேண்டும் என்ற நாகரிகம் தெரியாமல் நயினார் நாகேந்திரன் தொடர்ந்து பேசி வருகிறார். ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர் இது போன்ற தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைப்பது கண்டிக்கத்தக்கது.

“>

 

நோட்டாவுக்குக் கீழே வாக்கு வாங்கும் நிலையில் உள்ளவர்கள், தமிழகத்தின் எதிர்காலமாக இருக்கும் எங்கள் தலைவரைப் பற்றிப் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” எனப் பர்வேஸ் எச்சரித்தார்.