தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது கொள்கைகளை அறிவிக்கும் போது “ஆட்சியில் பங்கு” என்ற முழக்கத்தை முன்வைத்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஏற்கனவே இருக்கும் கட்சிகள் பிடிக்காமல் தான் விஜய் தனிக்கட்சி ஆரம்பித்தார். அப்படி இருக்கும் போது, மீண்டும் அதே கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவேன் என்று சொல்வது என்ன மாதிரியான லாஜிக்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

​”அவ்வளவு தூய்மையான கட்சிகள் ஏற்கனவே இருந்திருந்தால், விஜய் கட்சி ஆரம்பித்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே!” என்று சீமான் விமர்சித்துள்ளார். மேலும், ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடு கொண்ட பழைய கட்சிகளுக்கு மீண்டும் மந்திரி பதவிகளைக் கொடுத்தால், விஜய் தரப்போகும் ஆட்சியின் தரம் எப்படி இருக்கும்? அது மீண்டும் பழைய நிலையையே கொண்டு வரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். விஜய்யின் இந்த அரசியல் வியூகம் மாற்றத்திற்கானதாகத் தெரியவில்லை எனச் சீமான் கூறியுள்ளது தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.