சென்னை பெரம்பூரில் வசித்து வந்த சகாய செபஸ்டின் என்பவர், தனது மனைவி ரெக்சி பியூலாவுக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். பல லட்சம் செலவு செய்தும் நோய் குணமாகாததாலும், மனைவி விரைவில் இறந்துவிடுவார் என்ற பயத்தாலும் குடும்பத்தோடு தற்கொலை செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.

இதற்காக “ஹாப்பி பேமிலி டே” என்று எழுதப்பட்ட கேக்கை ஆர்டர் செய்து, அதில் கரையானைக் கொல்லும் விஷத்தைத் தடவி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு ஊட்டியுள்ளார்.

கேக் சாப்பிட்ட அனைவரும் மயங்கிய நிலையில், அவர்கள் இறந்துவிட்டதாக நினைத்த சகாய செபஸ்டின் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதில் 4 வயது மகன் பரிதாபமாக உயிரிழக்க, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மனைவி மற்றும் 8 வயது மகள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரு மகிழ்ச்சியான குடும்பம் நோயின் கொடுமையால் இப்படிச் சிதைந்து போன சம்பவம் பெரம்பூர் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.