ஜிம்பாப்வேயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான (U-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
U 19 விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை வரலாற்றில், இந்திய அணி 6-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
வெற்றி கோப்பையுடன் நாடு திரும்பிய கேப்டன் ஆயுஷ் மாத்ரே, மும்பையில் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்தார். இளம் வீரரின் ஆட்டத்தையும், தலைமையையும் பாராட்டிய சச்சின், அவருக்கு ஒரு நெகிழ்ச்சியான பரிசை வழங்கினார்.
https://twitter.com/rushiii_12/status/2020881735945519311?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2020881735945519311%7Ctwgr%5E6dd13b86db38e89d90b0e1c3c221386f70e90a41%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-38491855362653828570.ampproject.net%2F2601162341000%2Fframe.html
சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதித் தொடரில் பயன்படுத்திய ஜெர்சியை (Jersey) ஆயுஷ் மாத்ரேவுக்குப் பரிசாக வழங்கினார். ஜாம்பவான் சச்சின் கையால் இந்த உயரிய பரிசை ஆயுஷ் மாத்ரே பெற்றுக்கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறை நட்சத்திரமாகப் பார்க்கப்படும் ஆயுஷ் மாத்ரேவுக்கு, சச்சினின் இந்த ஊக்கம் பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
