டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஜிம்பாப்வே அணியின் 22 வயது இளம் வீரர் பிரையன் பென்னட் செய்த சாகசம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆட்டத்தின் 20-வது ஓவரில், ஓமன் வீரர் நதீம் கான் அடித்த பந்தைப் பிடிக்க பென்னட் சுமார் 19 மீட்டர் தூரம் மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று, மைதானத்தில் டைவ் அடித்து ஒரு அபாரமான கேட்சைப் பிடித்தார்.

தரையில் கை கால்கள் உராய்ந்து காயம் ஏற்பட்ட நிலையிலும், அவர் பந்தைத் தவறவிடாமல் பிடித்தது இந்தத் தொடரின் மிகச்சிறந்த கேட்சுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

களத்தடுப்பில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்திய பென்னட், 48 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களின் அதிரடி தாக்குதலால் ஓமன் அணி 103 ரன்களுக்குச் சுருண்டது.

“>

 

தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 13.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பென்னட்டின் அந்தப் பிரமிக்க வைக்கும் கேட்ச் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.