ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திரத்தில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கால்நடைத் திருவிழாவில், ‘சாந்து’ (Chand) என்ற தார்பார்க்கர் (Tharparkar) இனத்தைச் சேர்ந்த காளை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 4 வயதேயான இந்தக் காளை, சுமார் 800 கிலோ எடையுடன் பார்ப்பதற்கே மிரட்டலாக காட்சியளிக்கிறது.
இதன் உரிமையாளர் லோகேஷ் குர்ஜர், இந்தக் காளையைத் தனது குழந்தையைப் போல வளர்த்து வருகிறார். இந்தக் காளைக்கு ஒரு தனித்துவமான உணவுப் பழக்கம் உள்ளது; சாதாரண புல், தவிட்டிற்குப் பதிலாக இதற்கு அல்வா, பூரி மற்றும் சுவையான இனிப்புச் சூரி என்றால் அத்தனை இஷ்டமாம்.
இதுமட்டுமல்லாமல், தினமும் 3 லிட்டர் பசும்பால், வாரத்திற்கு இரண்டு முறை பாலில் நெய், மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கேரட், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் என ராஜ உபசாரம் செய்யப்படுகிறது.
இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்த ‘சாந்து’ காளையை, ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் ரூ. 15 லட்சம் கொடுத்து வாங்க முன்வந்தும், இதனைப் பரிசாகப் பெற்ற லோகேஷ், பணத்திற்காகத் தனது காளையை விற்க முடியாது என உறுதியாக மறுத்துவிட்டார்.
ராஜஸ்தானின் தார் பாலைவனத்தை எளிதாகக் கடக்கும் திறன் கொண்ட இந்த அபூர்வ இனக் காளை, தற்போது அந்தத் திருவிழாவின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
