சர்வதேச அரசியல் மேடையில் எப்போதுமே அதிரடியான முடிவுகளுக்கும், கம்பீரமான பேச்சுகளுக்கும் பெயர் போனவர் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் இத்தாலி நாட்டின் உறவு குறித்து அவர் பேசியுள்ள பேச்சு உலக அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

​செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, “தான் யாருக்கும் அடிபணிந்து நிற்கவில்லை” என்று மிகவும் ஆவேசமாகவும் தீர்க்கமாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தான் ஒன்றும் அமெரிக்காவிற்கு எதிரான நபர் கிடையாது என்றும், மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து செயல்படும் போதுதான் வலிமையாக இருக்கும் என்பதை முழுமையாக நம்புபவர் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

அதே நேரத்தில், எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் சரி, நாடுகளுக்கு இடையேயான உறுதியான உறவுகள் என்பது எப்போதுமே வெளிப்படைத்தன்மையின் (Transparency) அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்று டிரம்பின் முகத்திற்கு நேராகவே சாடியுள்ளார். தன் நாட்டின் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் அமெரிக்காவிற்கு இத்தாலி பிரதமர் கொடுத்துள்ள இந்த நெத்தியடிப் பதில், தற்போது உலக அளவில் இணையவாசிகள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.