சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்ற மோகத்தில் இளைஞர்கள் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது தற்போதைய காலத்தின் கசப்பான உண்மையாகிவிட்டது. சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் இளைஞர் ஒருவர் வாயில் பெட்ரோலை ஊற்றி தீப்பிழம்புகளை வரவழைக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அவரது முகம் முழுவதும் தீப்பிடித்தது. இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரை நடுங்க வைத்துள்ளது.
மேலும் வெறும் சில ‘லைக்’ மற்றும் ‘வியூஸ்’களுக்காகத் தனது உயிரையே பணயம் வைத்து இந்த ஆபத்தான விளையாட்டில் அவர் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோர விபத்து குறித்த செய்திகள் பரவியதைத் தொடர்ந்து, இது போன்ற உயிருக்கு ஆபத்தான செயல்களைச் செய்ய வேண்டாம் எனப் பலரும் சமூக வலைதளங்களில் எச்சரித்து வருகின்றனர்.
https://www.instagram.com/reel/DUbbMVuCnYU/?igsh=MWF1OWU1aWhidDBrMg==
இந்த பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் அறிவீனமாகச் செயல்படுவது ஒருவரின் வாழ்நாள் முழுவதையும் சிதைத்துவிடும் என்பதற்கு இந்தச் சம்பவமே ஒரு எச்சரிக்கை மணி. தற்போது அந்த இளைஞர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் ஆன்லைன் உலகத்திற்காகத் தற்கொலைக்குச் சமமான காரியங்களில் ஈடுபடும் இளைஞர்களின் மனநிலை குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
