தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸுடன் ரகசியக் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் இதற்கு அதிரடியாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

தவெக-வை மற்ற கட்சிகளுடன் தொடர்புபடுத்தி வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை என்றும், தங்கள் கட்சியின் கூட்டணிப் பேரத்தை உயர்த்திக் கொள்வதற்காகச் சில கட்சிகளே இது போன்ற வதந்திகளைப் பரப்பி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதன் மூலம் கூட்டணி குறித்த வதந்திகளுக்குத் தவெக தரப்பு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.