தன் மகளின் திருமண நாளன்று சூரத்தைச் சேர்ந்த கட்டுமான அதிபர் ஒருவர் தற்கொலைக்கு முயன்று, பின்னர் மாரடைப்பால் உயிரிழந்த துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர், தனது மகளின் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், திடீரென துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்நிலையில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினர் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். துப்பாக்கிக் சூட்டினால் ஏற்பட்ட காயம் ஒருபுறம் இருக்க, அந்த அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதே உயிரிழப்பிற்கு முக்கிய காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய திருமண வீடு, தந்தையின் இந்த விபரீத முடிவால் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.