விமான நிலையங்களில் பயணிகள் ஒப்படைக்கும் பயணப் பொதிகள் விமானத்திற்குள் ஏற்றப்படும் வரை கடந்து வரும் பாதையை விளக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
This is the journey your suitcase takes after checking in for a flight. ✈️🧳 pic.twitter.com/Ztv3vykL5t
— HOW THINGS WORK (@HowThingsWork_) February 4, 2026
ஒரு பெட்டியின் உள்ளே ரகசிய கேமரா பொருத்தப்பட்டு எடுக்கப்பட்ட இந்தக் காணொளியில், பெட்டியானது அதிவேக கன்வேயர் பெல்ட்கள், தானியங்கி ஸ்கேனிங் கருவிகள் மற்றும் பல்வேறு நிலைகளைக் கடந்து விமானத்தின் சரக்குப் பகுதிக்குச் செல்வது தத்ரூபமாகப் பதிவாகியுள்ளது.
பயணிகள் மிகவும் கவனமாகப் பேக் செய்யும் பெட்டிகள், இந்தப் பயணத்தின் போது பல இடங்களில் மோதியும் உருண்டும் செல்வதைக் கண்டு இணையவாசிகள் பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக, பெட்டிகள் சேதமடைவதற்கான காரணம் தற்போது புரிகிறது என்றும், இதைப் பார்த்த பிறகு இனிமேல் பெட்டிகளை ஒப்படைக்கவே அச்சமாக உள்ளது என்றும் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
