மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்றில், இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஒரு நபர் ஆவேசமாக கற்களை வீசித் தாக்கினார். இந்த மோதலில் துரதிர்ஷ்டவசமாக அங்கிருந்த வழிப்போக்கர் ஒருவர் மீது கல் பலமாக தாக்கியதில், அவர் தனது ஒரு கண்ணை இழந்துள்ளார்.
இந்த கொடூரமான தாக்குதல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கல்வீச்சில் ஈடுபட்ட நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
#WATCH | Mumbai, Maharashtra | A man has been arrested for allegedly throwing stones at a person at Bandra station following an argument.
The argument quickly turned violent, and one of them got off the local train and attacked the other with a stone he picked up from the… pic.twitter.com/0oBtTDnbpl
— ANI (@ANI) February 6, 2026
“>
மேலும் ரயில் நிலையம் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பொது இடத்தில், சிறு காரணத்திற்காக ஒருவரின் வாழ்க்கையைச் சிதைக்கும் வகையில் நடந்த இந்த வன்முறைச் சம்பவம் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
