குஜராத் மாநிலம் சூரத்தின் அல்தான்-பதர் பகுதியில், கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்கு அருகே நிகழ்ந்த ஒரு கோர விபத்து காண்போரை உறைய வைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, இப்பகுதியில் ஒரு பெண் தனது செல்போனில் பேசியபடி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த கட்டுமான தளத்திலிருந்து ஒரு டிராக்டர், ஓட்டுநரின் கவனக்குறைவால் அதிவேகமாகப் பின்னோக்கி வந்தது. பின்னால் பெண் வருவதைக் கவனிக்காத ஓட்டுநர் டிராக்டரை இயக்க, நிலைதடுமாறிய அந்தப் பெண் டிராக்டரின் அடியில் சிக்கி நசுக்கப்பட்டார்.

“>

 

டிராக்டரின் ராட்சத டயர்களுக்கு நடுவே சிக்கிய அந்தப் பெண், மரணத்தின் விளிம்பு வரை சென்று அதிர்ஷ்டவசமாகப் உயிர் தப்பினார். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் உடனடியாக அங்கிருந்து தப்பியோடிய நிலையில், காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கட்டுமான இடங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததே இத்தகைய விபத்துகளுக்குக் காரணம் என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தப்பியோடிய ஓட்டுநரைத் தேடி வரும் சூரத் காவல்துறையினர், சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் ஒப்பந்ததாரர் மீதும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.