குர்கானைச் சேர்ந்த ஒரு தெருவோர உணவு வியாபாரி, தனது உணவிற்காக அல்லாமல், ஒரு பெண்ணுக்கு அவர் அளித்த நறுக்கென்ற பதிலால் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

தனது கடைக்கு வந்த பெண்ணிடம் அந்த வியாபாரி காட்டிய சமயோசித புத்தி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. அந்தப் பெண்மணி, தனக்கு ஐந்து மாதங்களாக சம்பளம் வரவில்லை என்றும், அதனால் அவரது பழைய பெயர்ப்பலகையை அழகாக மாற்றி வடிவமைத்துத் தருவதாகவும் கூறினார்.
<a href="http://

“>
பொதுவாக இதுபோன்ற சலுகைகளை யாரும் மறுக்க மாட்டார்கள், ஆனால் இந்த வியாபாரி எதற்கும் அசரவில்லை.
அந்தப் பெண் தனது கஷ்டத்தைச் சொல்லி வாய்ப்பு கேட்டபோது, அந்த வியாபாரி மிகவும் நிதானமாக “வேண்டாம், என்னிடம் தான் ‘Canva’ இருக்கிறதே!” என்று ஒற்றை வரியில் பதிலடி கொடுத்தார்.

Canva என்பது போஸ்டர்கள் மற்றும் டிசைன்களை எளிதாக உருவாக்க உதவும் ஒரு இலவச செயலியாகும். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரே நாளில் 3 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

அந்தப் பெண்ணே தனது மதிப்பு குறைந்துவிட்டதாக கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த Canva நிறுவனமே ஆச்சரியத்தில் கமெண்ட் செய்துள்ளதுடன், “டிசைனர்களின் வேலையும் இனி அவ்வளவுதான் போல” என நெட்டிசன்கள் கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.