வறுமையின் பிடியில் சிக்கி, மூன்று திருமணங்கள் தோல்வியடைந்த நிலையிலும், தனது மகனை இந்தியத் திரையுலகமே வியந்து பார்க்கும் ஒரு ‘சூப்பர் ஸ்டாராக’ மாற்றிய அந்த வீரமங்கை வேறு யாருமல்ல அவர் மறைந்த பழம்பெரும் நடிகை புஷ்பவல்லி. தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் ஜொலித்த இவர், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்தார்.
மேலும் பொருளாதார நெருக்கடிகளும், உறவுகளின் முறிவுகளும் அவரை வாட்டிய போதும், தனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகத் தளராது உழைத்தார். தனது தாயின் அசாத்தியமான உழைப்பையும், அவர் வளர்த்த விதத்தையும் எப்போதும் பெருமையுடன் குறிப்பிடுபவர் அவருடைய மகளான பாலிவுட் நட்சத்திரம் ரேகா. புஷ்பவல்லி அவர்கள் நடிகர் ஜெமினி கணேசனுடன் கொண்டிருந்த உறவின் மூலம் பிறந்தவர் ரேகா.
ஆனால் தந்தை தன் பொறுப்புகளை ஏற்கத் தவறிய நிலையிலும், புஷ்பவல்லி ஒரு ஒற்றைத் தாயாக நின்று, கடும் வறுமையிலும் ரேகாவை ஒரு வெற்றிகரமான நடிகையாக மாற்றினார். இன்று பாலிவுட்டின் “எவர்-கிரீன்” சூப்பர் ஸ்டாராகப் போற்றப்படும் ரேகாவின் இந்த இமாலய வெற்றிக்கு பின்னால், அவரது தாய் புஷ்பவல்லியின் கண்ணீரும் தியாகமும் கலந்த ஒரு நீண்ட போராட்ட வரலாறு மறைந்துள்ளது.
