திருமண மேடையில் அனைவர் முன்னிலையிலும் நெருக்கமாக நடந்துகொண்ட மணமக்களைப் புரோகிதர் ஒருவர் தடுத்துக் கண்டித்த காணொளி சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தில்லி அருகே நடைபெற்ற இந்தத் திருமண விழாவில், மணமேடைக்கு வந்த மணமகன் தனது வருங்கால மனைவிக்கு மலர்க்கொத்து வழங்கி வரவேற்றுள்ளார்.
Panditji stopped the groom and bride from kissing on the stage.
Feminist girls will say he’s a bad person.
But he is old, he grew up with religion and values. He was brought there to conduct their marriage and he did so.
Society has changed, while he still holds his values. pic.twitter.com/Z1WmbRo8Wq
— ︎ ︎venom (@venom1s) January 29, 2026
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கு காரணமாக, மணமகன் மணமகளின் கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். இதைக் கண்ட அங்கிருந்த விருந்தினர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தியதால், அந்த ஜோடி மீண்டும் நெருக்கமாக முயன்றுள்ளது. உடனே தலையிட்ட புரோகிதர், அவர்களைப் பிரித்து இது புனிதமான சடங்கு நடைபெறும் இடம் எனக்கூறி மணமக்களையும் அவர்களைத் தூண்டிவிட்டவர்களையும் கடுமையாகச் சாடினார்.
இந்தச் சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்திய கலாச்சாரம் மற்றும் திருமணச் சடங்குகளின் புனிதத்தைப் பேண வேண்டும் எனப் புரோகிதரின் செயலை ஒரு தரப்பினர் ஆதரிக்கின்றனர். அதே வேளையில், திருமண பந்தத்தில் இணையும் ஒரு புதிய ஜோடி தங்களது அன்பை வெளிப்படுத்துவதில் தவறில்லை என மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் பூசலால் மணமகள் சற்றே அதிருப்தி அடைந்தாலும், சமூக வலைதளங்களில் இது தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
