ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை ஒருவர் தனது ஃபார்ச்சூனர் காரில் சென்றபடி, பொது சாலையில் மது பாட்டில்களை வீசி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அந்தப் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் நபர் ஒருவர் தட்டிக்கேட்டபோது, ஆத்திரமடைந்த அந்த வீராங்கனை அவரை கன்னத்தில் அறைந்துள்ளார்.

மேலும் “இங்கு என் அதிகாரம்தான் செல்லும்” என்கிற தோரணையில் அவர் நடந்து கொண்ட விதம் அங்கிருந்த மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், ஒரு விளையாட்டு வீராங்கனையே இத்தகைய பொறுப்பற்ற மற்றும் அநாகரீகமான செயலில் ஈடுபட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

“>

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் இது குறித்து புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒரு நபர், சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பொதுமக்களிடம் அராஜகத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.