எக்ஸ் தளத்தில் சமீபத்தில் வைரலாகி வரும் காணொளியில், தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையேயான ஒரு க்யூட்டான செல்லச் சண்டை பதிவாகியுள்ளது. வீடியோவில் அந்தச் சிறுவனின் முகம் சரியாகத் தெரியாவிட்டாலும், அவன் தாத்தாவுக்குக் கொடுக்கும் டஃப் (Tough) ஆன பதிலடி அனைவரையும் சிரிக்க வைக்கிறது. தாத்தா கையில் செருப்பை வைத்துக்கொண்டு விளையாட்டாக மிரட்ட, அந்தச் சிறுவன் சற்றும் தயங்காமல் தரையில் இருந்து ஒரு கல்லை எடுத்து அவருக்கு சவால் விடுகிறான். முகம் தெரியாத அந்தச் சிறுவனின் அந்த ஆக்ரோஷமான குறும்புத்தனமே அந்த வீடியோவின் ஹைலைட்
जिदंगी के पहला दोस्त और आखिरी दोस्त के बीच युद्ध 😂 pic.twitter.com/3bTMtsrkuV
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) January 22, 2026
ஒரு கட்டத்தில் அந்தச் சிறுவன் கல்லை எறிய, தாத்தா மீண்டும் அவனைச் சீண்டி விளையாட்டைத் தொடர்கிறார். அந்தச் சிறுவனின் ஒவ்வொரு அசைவிலும் ஒரு வீரம் கலந்த குறும்பு தெரிகிறது. நிஜமான பாசம் என்பது இது போன்ற சின்னச் சின்ன மோதல்களில் தான் இருக்கிறது என்பதை இந்த வீடியோ அழகாக உணர்த்துகிறது. இதைப் பார்க்கும் பலருக்கும் தங்கள் தாத்தாவுடன் விளையாடிய பழைய நினைவுகள் வந்து போவதாகக் கூறி வருகிறார்கள்.
