ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள பிர்லா கோவில் வளாகத்தில் குடியரசு தினமான நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணி ஒருவர் கூகுள் மேப்ஸ் காட்டிய வழியை நம்பி காரை ஓட்டி வர, அது நேராக பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டுகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டது. ரோடு என்று நினைத்து காரை விட்டவர், படிக்கட்டுகளில் கார் இறங்கத் தொடங்கியதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

படிக்கட்டுகளில் கார் தட்டுத்தடுமாறி இறங்கியதைப் பார்த்து அங்கிருந்த பக்தர்கள் அலறியடித்து ஓடினர். நல்லவேளையாக டிரைவர் சரியான நேரத்தில் பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கார் பத்திரமாக மீட்கப்பட்டது.