ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 19 வயது இளம்பெண்ணை, 22 வயது கல்லூரி மாணவர் ஒருவர் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் இவர்கள் இருவரும் சமூக வலைதளத்தில் பழகியுள்ளனர். கடந்த 23-ம் தேதி அந்தப் பெண்ணைத் நேரில் சந்திக்க அழைத்த மாணவர், அவர் மறுப்பையும் மீறி வலுக்கட்டாயமாக ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
அங்கிருந்து தப்பி வந்த இளம்பெண், தனது தாயிடம் நடந்ததைக் கூறி அழுததையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டில் தொடர்புடைய கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தற்போது தலைமறைவாக உள்ளார்.
போலீசார் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, அவர் தன்னை விட வயது குறைந்த பல பெண்களைக் குறிவைத்து ஆபாசமாக மெசேஜ் அனுப்பிப் பேசி வந்த திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இந்த மாணவர் இதேபோல வேறு பெண்களையும் ஏமாற்றியுள்ளாரா என்ற கோணத்தில் அலிபிரி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
