பனிமலையில் செல்ஃபி மற்றும் விளையாட்டில் காட்டும் ஆர்வம், உயிருக்கே உலை வைத்துவிடும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சி. தற்போது உலகெங்கும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இந்தியாவில் சிம்லா, மணாலி போன்ற இடங்களிலும் பனி கொட்டித் தீர்க்கிறது. இதனை ரசிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் பலர் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதில்லை.
Be careful when u travel in winters pic.twitter.com/m2288AN3Qs
— Go Himachal (@GoHimachal_) January 24, 2026
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், பனி படர்ந்த படிக்கட்டுகளில் சில பெண்கள் அமர்ந்து விளையாடிக்கொண்டிருக்கின்றனர். அப்போது மேலிருந்து ஒரு இளம்பெண் எதிர்பாராத விதமாக வழுக்கி விழுகிறார்.
படிக்கட்டுகளில் இருந்த பனி உறைந்து போயிருந்ததால், அவரால் நிற்க முடியாமல் அதிவேகத்தில் கீழே சறுக்குகிறார். அவர் கீழே வரும் வேகத்தில் அங்கிருந்த மற்ற பெண்களையும் மோதித் தள்ளுகிறார்.
அதிர்ஷ்டவசமாக கீழே இரும்பு வேலி (Railings) இருந்ததாலும், அங்கிருந்தவர்கள் அவரைப் பிடித்ததாலும் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
வெறும் 16 நொடிகள் ஓடும் இந்த வீடியோ, “பனி என்பது மென்மையான பஞ்சு அல்ல, அது ஆபத்தான வழுக்கும் தளம்” என்பதை எச்சரிக்கிறது. @GoHimachal_ என்ற எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, “குளிர்காலத்தில் பயணம் செய்யும்போது கவனமாக இருங்கள்” என்ற வாசகத்துடன் வைரலாகி வருகிறது.
