தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சாலை விபத்துகள் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மதுரை அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளப்பட்டி அருகே,  சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து மீது, பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு ஆம்னி பேருந்து எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

“>

 

இந்த விபத்தின் கோரத்தினால் பேருந்தின் முன்பகுதி உருக்குலைந்த நிலையில், அதில் பயணம் செய்த 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 15 பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமாக இவ்விபத்து நிகழ்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.