தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் மிகவும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தேர்தலை எதிர்கொள்ளத் தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில், அக்கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது.

இந்தச் சின்னம் சாதாரண மக்களையும் இளைஞர்களையும் எளிதில் சென்றடையும் என்று அக்கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், தவெக-வின் விசில் சின்னம் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கிண்டலாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்களுக்கு இப்போது விசில் தேவையில்லை; எங்களிடம் இருக்கும் குக்கரிலேயே விசில் இருக்கிறது” என்று நகைச்சுவையாகக் கூறினார்.

இந்த விமர்சனம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தி, தேர்தல் அரசியலை இன்னும் சுவாரசியமாக்கியுள்ளது.