ஆஸ்திரேலிய ஓபன் 2026 டென்னிஸ் தொடரின் விறுவிறுப்பான ஆட்டம் ஒன்றின் போது, உலகின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் ஆத்திரத்தில் பந்தை வேகமாக அடிக்க முயன்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் ஒரு கட்டத்தில் புள்ளிகளை இழந்த விரக்தியில், அவர் பந்தை ஓங்கி அடிக்க, அது அங்கிருந்த பந்து பொறுக்கும் சிறுவன் மீது படுவது போல மிக அருகாமையில் சென்றது.

மேலும் அதிர்ஷ்டவசமாக அந்த சிறுவன் மீது பந்து படவில்லை என்றாலும், ஜோகோவிச்சின் இந்த பொறுப்பற்ற செயல் மைதானத்தில் இருந்த ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், விளையாட்டு ஆர்வலர்கள் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“>

இதனால் ஜோகோவிச் இது போன்ற சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல என்பதால், இந்த விவகாரம் சர்வதேச டென்னிஸ் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. முன்னதாக 2020 அமெரிக்க ஓபன் போட்டியின் போது, இதேபோல் விரக்தியில் அடித்த பந்து பெண் நடுவர் ஒருவரின் தொண்டையில் பட்டதால் ஜோகோவிச் தொடரிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை பந்து பொறுக்கும் சிறுவனுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அவர் நடந்து கொண்டது, ஒரு மூத்த வீரருக்கு அழகல்ல என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்படுமா அல்லது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.