குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள தட்கேஷ்வர் கிராமத்தில் சுமார் ரூ.21 கோடி செலவில் பிரம்மாண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. திறப்பு விழாவிற்கு முன்பாக சோதனை முறையில் 9 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டபோது, அந்தத் தொட்டி நிலநடுக்கம் ஏற்பட்டது போல திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.
இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் காயமடைந்தனர். கட்டுமானப் பணியில் தரம் குறைவான பொருட்களைப் பயன்படுத்தியதே விபத்திற்கு காரணம் எனப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், ஒப்பந்ததாரர் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
