மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள காரட் பகுதியில் நடந்த ஒரு சாலை விபத்து, பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது. அதிவேகமாக வந்த ஸ்கூட்டர் ஒன்று கார் மீது மோதியதில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரட் நகரின் முக்கிய சாலையில் இரண்டு பெண்கள் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு கார் மீது ஸ்கூட்டர் மிக வேகமாக மோதியது.
📍Karad, Maharashtra: A speeding bike crashed into a Mahindra Bolero in Budhwar Peth on Monday, leaving two young women seriously injured. pic.twitter.com/9cHs62MDYz
— Deadly Kalesh (@Deadlykalesh) January 22, 2026
மோதிய வேகத்தில் ஸ்கூட்டரில் இருந்த இரண்டு பெண்களும் காற்றில் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர். இதில் அவர்களுக்குத் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் துடித்தனர்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிவேகமே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
