தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை தங்கள் கட்சியில் இணைப்பது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் பணிகளில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரம் போன்ற சுழன்று வருவதாகவும் அதே நேரத்தில் தமிழக வெற்றிக்கழகம் முடங்கி கிடப்பதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது.

தமிழக வெற்றி கழகத்தில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் இணைவதாக கூறப்பட்ட நிலையில் டிடிவி தினகரன் நேற்று திடீரென தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அறிவித்தார். இன்னும் ஓபிஎஸ் மற்றும் தேமுதிக தங்களுடைய முடிவுகளை அறிவிக்காத நிலையில் அவர்கள் யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் பாமக கட்சியில் அன்புமணி அதிமுக பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் ராமதாஸ் அந்த கூட்டணி அறிவிப்பு செல்லாது எனவும் தான் அமைப்பது தான் உண்மையான கூட்டணி எனவும் கூறி வருவதால் அவரும் யாருடன் கூட்டணி எங்களுக்கு போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் தொடர்பான விமர்சனங்களுக்கு அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதாவது கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மூன்று இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்தி வெற்றி பெற்றார். அதே போன்று விஜயும் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விரைவில் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்..