உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள உணவகம் ஒன்றில், சமையல்காரர் சப்பாத்தி மாவின் மீது எச்சில் துப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 19-ஆம் தேதி கோவிந்த்புரம் பகுதியில் உள்ள உணவகத்தில் இந்த அருவருப்பான செயல் அரங்கேறியுள்ளது.

இது தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியிலுள்ள கோயில் பூசாரி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உணவகத்தின் உரிமையாளர் அம்ஜத் மற்றும் சமையல்காரர் பைசான் ஆகிய இருவரையும் கவிநகர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த விசாரணையின் போது, இந்த விவகாரம் குறித்து உரிமையாளர் முறையான விளக்கம் அளிக்கத் தவறியதுடன், சமையல்காரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் தெரியவந்தது. தற்போது கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பொது சுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் இதுபோன்ற செயல்கள் பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.