சமூக வலைதளங்களில் “திருமணம் என்றாலே பயமாக இருக்கிறது” (Marriage is scary) என்ற வாசகத்துடன் பகிரப்படும் வீடியோ ஒன்று இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஒரு பெண் தனது கணவர் அருகிலேயே இருக்கும்போது, மற்றொரு நபரை அதே உரிமையுடன் அழைக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், இளம்பெண், தனது கணவருக்குத் தெரியாமல் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது கணவர் வந்ததால் படுக்கைக்கு அடியில் காதலன் ஒளிந்து கொள்கிறார். அவரை பிடித்து தர்ம அடி கொடுக்கிறார்கள் .
இந்த வீடியோவின் உண்மைத்தன்மை ஒருபுறம் இருக்க, இதனைப் பகிரும் பல இளைஞர்கள் “திருமணம் செய்துகொள்வதற்கே இப்போது அச்சமாக இருக்கிறது; நாம் உயிருக்குயிராக நேசிக்கும் மனைவி, நம் கண்ணெதிரிலேயே வேறொருவரை இப்படி என்றால் அந்த உறவின் நிலை என்ன?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
இந்த வீடியோ ஒரு ‘ப்ராங்க்’ (Prank) எனப்படும் வேடிக்கைக்காக எடுக்கப்பட்டதா அல்லது நிஜமாகவே நடந்த சம்பவமா என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. இருப்பினும், எக்ஸ் (X) உள்ளிட்ட தளங்களில் இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பல நெட்டிசன்கள், “இக்காலத்து உறவுகளில் நேர்மை குறைந்து வருவதையே இத்தகைய காட்சிகள் காட்டுகின்றன” எனக் கவலை தெரிவித்துள்ளனர். அதே சமயம், “எல்லா உறவுகளையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது, இது போன்ற ஒரு சில சம்பவங்களை வைத்து திருமண உறவின் மீதான நம்பிக்கையை இழக்கத் தேவையில்லை” என்றும் ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். மேலும் தற்போது இந்த வீடியோ “Marriage is scary” என்ற ஹேஷ்டேக் மூலம் உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது.
Marriage is scary… what if your wife calls someone else like that 🙂 pic.twitter.com/jFxp3hvk8j
— .. (@Superoverr) January 20, 2026
