தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணியை வலுப்படுத்த பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் நாளை சென்னை வந்து தேமுதிக தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தேமுதிக-வை இணைப்பதற்கான இறுதி கட்டப் பேச்சுவார்த்தையாக இது பார்க்கப்படுகிறது. வரும் ஜனவரி 23-ம் தேதி செங்கல்பட்டில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக, கூட்டணியை உறுதி செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.

​கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தேமுதிக தரப்பு மிகவும் வலுவாக இருப்பதாகத் தெரிகிறது. 18 சட்டமன்றத் தொகுதிகளுடன், ஒரு மாநிலங்களவை (Rajya Sabha) சீட்டையும் தேமுதிக கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜனவரி 22-ம் தேதிக்குள் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஒருவேளை இந்த டீல் ஓகே ஆனால், தமிழக தேர்தல் களம் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.