சமூக வலைதளங்களில் அவ்வப்போது மாணவர்களின் வினோதமான விடைத்தாள்கள் வெளியாகி சிரிப்பை வரவழைக்கும். ஆனால் தற்போது ஒரு ஆசிரியரின் கவனக்குறைவால் மாணவி ஒருவருக்கு நேர்ந்த விபரீதம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பள்ளியின் மாணவி தனது தேர்வில் ஏழாம் இடம் பிடித்து மிகச்சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். கணிதம் மற்றும் கலைப்பயிற்சி உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களை அந்த மாணவி குவித்திருந்தார். மகளின் இந்த வெற்றியை கண்டு பெற்றோர் மகிழ்ச்சியடைந்த நிலையில் அந்த மாணவியின் முன்னேற்ற அறிக்கையில் ஆசிரியர் எழுதிய ஒரு குறிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மாணவியின் வெற்றியைப் பாராட்டி ஊக்கப்படுத்த நினைத்த அந்த ஆசிரியர் அந்த அறிக்கையின் குறிப்புப் பகுதியில் அவர் இறந்துவிட்டதாகத் தவறாக எழுதிவிட்டார். அவர் தேர்ச்சி பெற்றுவிட்டார் என்பதை ஆங்கிலத்தில் குறிப்பிடுவதற்குப் பதிலாக அவர் காலமானார் என்ற பொருளில் ஒரு வாக்கியத்தை ஆசிரியர் பதிவிட்டுள்ளார்.

ஆசிரியரின் இந்த மொழி அறிவு மற்றும் கவனக்குறைவான செயல் அந்த மாணவியின் பெற்றோரை நிலைகுலையச் செய்தது. தற்போது இந்த வினோதமான அறிக்கை சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வரும் நிலையில் ஒரு ஆசிரியரின் இத்தகைய பொறுப்பற்ற செயல் பொதுமக்களிடையே பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.