பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில், காரில் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தினரை இளைஞர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், காரை வழிமறித்து ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் சென்று மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி மிரட்டுவது தெளிவாகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் காரின் உள்ளே இருந்தவர்கள் அச்சத்தில் உறைந்த நிலையில், இந்த அநாகரிகமான செயல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் உடனடியாகச் செயல்பட்ட பெங்களூரு காவல்துறையினர், சம்பந்தப்பட்ட இளைஞரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

“>

மேலும் சாலை ஆக்ரோஷம் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பொது இடங்களில் கத்தி போன்ற ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இச்சம்பவம் நகரப் பகுதிகளில் பயணிகளின் பாதுகாப்புக் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.