சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, தாய் பாசத்திற்கு ஈடுஇணை ஏதுமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. தற்செயலாக ஒரு உயரழுத்த மின்சாரக் கம்பி மீது ஏறிய குட்டி லங்கூர் குரங்கு ஒன்று, அங்கிருந்து கீழே குதிக்க முடியாமல் பயத்தில் தவித்துக் கொண்டிருந்தது.

மேலும் தரைப்பகுதியிலிருந்து நீண்ட உயரத்தில் இருந்ததாலும், மின்சார அபாயம் இருந்ததாலும் அந்தக் குட்டி எவ்வித முயற்சியும் எடுக்க முடியாமல் நடுங்கியபடி கம்பியைப் பிடித்துக் கொண்டிருந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் பெரும் கவலையடைந்தனர்.

“>

ஆனால், தன் குட்டியின் தவிப்பைக் கண்ட தாய் குரங்கு, சிறிதும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் செயல்பட்டது. தனது உயிருக்கு ஆபத்து நேரிடும் என்று தெரிந்தும், சாமர்த்தியமாக மின்கம்பிக்கு அருகில் தாவிய அந்தத் தாய், லாவகமாகத் தன் குட்டியை இறுகப் பற்றிக் கொண்டது.

இதனால் அடுத்த நொடியே குட்டியைத் தனது நெஞ்சோடு அணைத்தபடி பாதுகாப்பான இடத்திற்குத் தாவியது. இந்த நெகிழ்ச்சியான மீட்புக்காட்சி பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்கியதுடன், இயற்கையின் உன்னதமான தாய்மை உணர்வைப் பறைசாற்றுவதாக அமைந்தது.