அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் உள்ள ஒரு மோட்டலை (Motel) குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த இந்திய வம்சாவளி தம்பதி, அங்கு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.
‘மாமா கே’ மற்றும் ‘பாப்’ என்று அழைக்கப்படும் இந்த தம்பதி, அந்த ஹோட்டலை ஒரு பாலியல் தொழில் மையமாகவும், போதைப்பொருள் விற்பனை கூடமாகவும் மாற்றி வைத்திருந்தது அந்நாட்டு போலீசாரை அதிர வைத்துள்ளது.
விசாரணையில், இந்த தம்பதி போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்களைத் தங்கள் ஹோட்டலில் தங்க வைத்து, அவர்களிடம் இருந்து கமிஷன் பெற்று வந்தது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, போதைக்கு அடிமையானவர்களைப் பயன்படுத்தி இந்த சட்டவிரோத சாம்ராஜ்யத்தை அவர்கள் நடத்தி வந்துள்ளனர். நீண்ட நாட்களாகக் கண்காணித்து வந்த அமெரிக்கப் புலனாய்வு அமைப்பினர், தற்போது ஆதாரங்களுடன் அவர்களைக் கைது செய்துள்ளனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இது போன்ற சர்வதேச குற்றச் செயல்களில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
