விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் பாமகவின் முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் ராமதாஸ், ஒரு மிகப்பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். “பாமக-வின் தலைவர் நான்தான், அன்புமணி அல்ல” என்று மிகத் தெளிவாகக் கூறினார். டெல்லி நீதிமன்றத் தீர்ப்பின்படி, கட்சியின் பெயர், கொடி, சின்னம் எதையும் அன்புமணி பயன்படுத்தக்கூடாது என்றும், மீறினால் அது நீதிமன்ற அவமதிப்பு என்றும் அதிரடியாகத் தெரிவித்தார்.

​கூட்டணி குறித்துப் பேசிய அவர், மக்கள் மெச்சும் வகையிலான ஒரு ‘நாணயமான’ கூட்டணியை விரைவில் அறிவிப்போம் என்றார். மேலும், திமுக மற்றும் அதிமுக அளித்து வரும் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளைச் சாடிய அவர், ஓட்டுக்காக என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் மக்கள்தான் உண்மையான எஜமானர்கள், அவர்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என்று கூறினார். மகனுக்கே அவர் தடை விதித்திருப்பது பாமக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.