இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அதிரடி இறுதிப்போட்டி இந்தூரில் நடக்கவுள்ளது. இதற்காக அங்கு முகாமிட்டுள்ள இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், செய்துள்ள ஒரு காரியம் இப்போது சோஷியல் மீடியாவில் செம வைரல்! சுமார் 31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அதிநவீன வாட்டர் பியூரிஃபையர் ஒன்றை, கில் தனது ஹோட்டல் அறைக்கே வரவழைத்துள்ளாராம். பாட்டில் தண்ணீராக இருந்தாலும், அதை மீண்டும் ஒருமுறை இந்த மெஷினில் சுத்திகரித்துத்தான் குடிக்கிறாராம் நம்ம கேப்டன். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “தண்ணீருக்கே இவ்வளவு செலவா?” என வாயடைத்துப் போயுள்ளனர்.
இந்தூரில் நிலவும் குடிநீர் மாசுப் பிரச்சினை காரணமாக கில் இப்படிச் செய்கிறாரா? அல்லது தனது உடற்தகுதியைப் பாதுகாக்க அவர் பின்பற்றும் தனிப்பட்ட நடைமுறையா? எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன. “ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தப்பா போயிடக்கூடாது” என்பதில் கில் இவ்வளவு கறாராக இருப்பது, மற்ற வீரர்களிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் களத்தில் ரன் மெஷினாக இருக்கும் கில், இப்போது வாட்டர் மெஷின் மேட்டரால் டிரெண்டிங்கில் டாப் கியரில் இருக்கிறார்
