ஜான்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது மனைவி காதலனுடன் இருப்பதை அறிந்த கணவர், போலீசாருடன் அங்கு சென்று அவர்களை கையும் களவுமாகப் பிடித்தார். ஆனால், அங்கு நடந்த விஷயம்தான் எல்லோரையும் அதிர வைத்தது. தன் கணவர் கத்தியும், போலீசார் சூழ்ந்து நின்றும் கூட, அந்தப் பெண் சற்றும் பதறாமல் மிகவும் தைரியமாகச் செயல்பட்டார். “அவர் எனக்கு எப்போதோ செத்துவிட்டார்” என்று போலீசார் முன்னிலையிலேயே கணவரைப் பார்த்துக் கூறிவிட்டு, காதலனுக்கு ஆதரவாக நின்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
Jhansi again. Husband reached the hotel with Police in Jhansi and caught his wife red handed with her BF. But, the wife confidently handled the situation and told the cops that he is dead for her. India badly needs No Question Divorce.pic.twitter.com/xtiVm33GjM
— NCMIndia Council For Men Affairs (@NCMIndiaa) January 15, 2026
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “இந்தியாவிற்கு இப்போது உடனடி விவாகரத்து சட்டம் (No Question Divorce) மிகவும் அவசியம்” என்ற விவாதத்தை இது கிளப்பியுள்ளது. ஒரு பக்கம் கணவர் துரோகத்தால் நிலைகுலைந்து நிற்க, மறுபக்கம் அந்தப் பெண் காட்டிய அசாத்திய துணிச்சல் மற்றும் அலட்சியம் இணையவாசிகளிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
