உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஒரு பழமையான அனுமன் கோவிலில், கடந்த சில நாட்களாக ஒரு அதிசயமான சம்பவம் நடந்து வருகிறது. அங்கே இருக்கும் அனுமன் சிலையை நாய் ஒன்று கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து சுற்றி வந்து கொண்டே இருக்கிறது. அந்த நாய் சோர்வடையாமல், இடைவிடாமல் சிலையைச் சுற்றி வருவதைப் பார்த்த அங்கிருக்கும் மக்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர். எதற்காக அந்த நாய் இப்படிச் செய்கிறது என்று தெரியாமல், பலரும் இதை ஒரு தெய்விகச் செயலாகப் பார்த்து வருகிறார்கள்.
BIG NEWS 🚨 A dog has been continuously circling Hanuman Ji’s idol at Bijnor’s ancient Hanuman temple for the past four days 😳
Devotees are calling it a miracle. pic.twitter.com/WgPs3tcErv
— News Algebra (@NewsAlgebraIND) January 15, 2026
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த நிலைக் காணொளியில், அந்த நாய் மிகுந்த பக்தியுடன் அனுமனை வலம் வருவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதைப் பார்த்த பக்தர்கள் பலரும் இது அனுமனின் அற்புதம் என்றும், அந்த நாய் ஏதோ ஒரு தெய்விக சக்தியால் ஈர்க்கப்பட்டு இப்படிச் செய்வதாகவும் நம்புகிறார்கள். பிஜ்னோர் பகுதியில் உள்ள அந்தத் கோவிலுக்கு இந்த அதிசயத்தைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளனர். அறிவியலுக்கு அப்பாற்பட்ட இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
