பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வகுப்பைப் புறக்கணித்து, ரகசியமாக வீடியோ கேம் விளையாடச் சென்ற மாணவர் ஒருவர் தனது தந்தையிடம் கையும் களவுமாக சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த சிறுவன் ஒரு கேமிங் கஃபேவில் அமர்ந்து மும்முரமாக விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவனது தந்தை அங்கு வந்துள்ளார். பின்னால் தந்தை நிற்பதை அறியாமல் விளையாட்டில் மூழ்கியிருந்த சிறுவனை, அவர் கையைப் பிடித்து கச்சிதமாகப் பிடித்துள்ளார்.
பள்ளிக்குச் செல்லாமல் இங்கு என்ன செய்கிறாய் என்று கோபமடைந்த தந்தை, அங்கேயே அந்தச் சிறுவனுக்கு தர்ம அடி கொடுக்கத் தொடங்கினார். தந்தையைப் பார்த்த அதிர்ச்சியில் அவரிடமிருந்து தப்பிக்க அந்த சிறுவன் கஃபேவை விட்டு அலறியடித்துக்கொண்டு ஓடினான்.
இந்த வேடிக்கையான வீடியோ ‘X’ தளத்தில் பகிரப்பட்டு 12 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
Dad caught his son playing a game, when he was supposed to go to School💀
pic.twitter.com/VT3xGF9riR— Ghar Ke Kalesh (@gharkekalesh) January 12, 2026
“>
இதைப் பார்த்த நெட்டிசன்கள், “நிஜமான வீடியோ கேம் இனிமேல்தான் வீட்டில் ஆரம்பமாகும்” என்றும், “இது எனது சிறுவயது ஞாபகங்களை கிளறுகிறது” என்றும் நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
