மகாராஷ்டிராவின் கல்யாண் பகுதியில் உள்ள யோகிதாம் என்ற இடத்தில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சார ஊர்வலத்தின் போது, கட்சி கொடி ஒன்று எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்சார உயர் அழுத்த கம்பி மீது மோதியது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், கட்சி கொடிகள் கட்டப்பட்ட வாகனம் ஒன்று செல்லும்போது, ஒரு கொடிக்கம்பம் மின் கம்பியில் உரசுவதும், உடனே பெரும் தீப்பொறி கிளம்பி அந்த வாகனத்தில் புகை மூட்டம் உருவாவதும் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
<a href=”http://

 

View this post on Instagram

 

A post shared by Freldaway (@freldaway)

“>
இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவினாலும், இது குறித்து காவல்துறை அல்லது அரசு அதிகாரிகள் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக இந்த வீடியோ வெளியான நிலையில், பொது இடங்களில் இதுபோன்ற பேரணிகள் நடத்தும்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.