சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில மேஜிக் வீடியோக்கள் நம்மை வாயடைக்க வைக்கும். அந்த வகையில், சண்டிகரைச் சேர்ந்த ‘மெண்டலிஸ்ட்’ அபய் சர்மா என்பவர் செய்த ஒரு காரியம் இப்போது இன்டர்நெட்டையே அதிர வைத்துள்ளது.
சாலையில் சென்ற சில பெண்களை நிறுத்திய அபய், ஒரு பெண்ணின் செல்போனைத் தொடாமலேயே அதன் ஃபிளாஷ் லைட்டை எரிய வைத்தார்.
View this post on Instagram
“இது எப்படி சாத்தியம்?” என அவர்கள் மிரண்டு போயிருந்த நேரத்தில், அடுத்த அதிரடியைக் காட்டினார். அபய் தனது போனைத் தரையில் வைத்தார். அவர் கையை அசைத்த அடுத்த நொடி, தரையில் இருந்த போன் தானாகவே காற்றில் பறந்து வந்து அவர் கையில் அமர்ந்தது. இதைப் பார்த்த அந்தப் பெண்கள், “இம்பாசிபிள்! இது எப்படி முடிந்தது?” என அலறியே விட்டனர்.
15 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்களைக் கொண்ட அபய் சர்மா, இது எந்த மந்திரமும் இல்லை, வெறும் ‘கைவரிசை மற்றும் உளவியல் ரீதியான தந்திரம்’ (Psychological Illusion) தான் என்கிறார்.
