சமூக வலைதளங்களில் ஒரு பெண்ணின் விசித்திரமான மற்றும் ஆபத்தான நடன வீடியோ தற்போது தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் தனது தலையில் எரியும் நெருப்புடன் கூடிய சூடான அடுப்பை வைத்தபடி லாவகமாக நடனமாடுகிறார்.
மேலும் சமநிலையைத் தவறினால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதை உணராமல், அவர் செய்யும் இந்த சாகசம் பார்ப்பவர்களைப் பதற வைக்கிறது. ஒரு சிறிய தவறு நடந்தால் கூட பெரும் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், துணிச்சலான ஆனால் மிகவும் பொறுப்பற்ற இந்தச் செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
View this post on Instagram
“>
இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “திறமை காட்ட இன்னும் எத்தனையோ வழிகள் உள்ளன, இப்படி உயிரைப் பணயம் வைத்துதான் புகழ்பெற வேண்டுமா?” எனப் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
இது குறித்து சில நொடி சமூக வலைதளப் புகழுக்காகவும், ‘லைக்ஸ்’களுக்காகவும் மக்கள் தங்களின் பாதுகாப்பை மறந்து இத்தகைய விபரீத முயற்சிகளில் ஈடுபடுவது பெரும் கவலையை ஏற்படுத்துவதாகப் பதிவிட்டு வருகின்றனர். இதைப் பார்த்த பலரும் தங்களது தலையில் கை வைத்தபடி, “என்னவெல்லாம் செய்கிறார்கள்!” என ஆச்சரியத்தையும் அச்சத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
