விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் குறித்த தேதியில் வெளியாகாமல் முடங்கியுள்ளது.
இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் வரும் 19-ஆம் தேதி இதனை விசாரிக்க உள்ளது.
“விஜய்க்கு அரசியல் அழுத்தம் கொடுக்கவே இப்படிச் செய்கிறார்கள்” என திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பில் மத்திய அரசுக்கு எதிராகக் குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற நடிகர் விமலிடம், ‘ஜன நாயகன்’ பட சென்சார் சிக்கல் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த விமல், தனது டிரேட் மார்க் பாணியில், “இதெல்லாம் என்கிட்ட கேட்டா எனக்கு என்ன தெரியும்? நான் பதில் சொல்ற மாதிரியான கேள்வியா கேளுங்கப்பா” எனச் சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு நழுவினார்.
விஜய்யின் அரசியல் வருகை மற்றும் படம் முடங்கியுள்ள விவகாரத்தில் கருத்து சொல்லி வம்பில் சிக்கிக்கொள்ள விரும்பாமல் விமல் எஸ்கேப் ஆன வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
