தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் விஜய் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீசாக இருந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் படக்குழு மேல்முறையீடு செய்து பொங்கல் அன்று படத்தை வெளியிட தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் வெளியான தெறி திரைப்படம் ஜனவரி 15ஆம் தேதி அதாவது பொங்கல் அன்று ரீ ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்திருந்தார்.

இந்த விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகாது என தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். அதாவது புதிய படங்களின் தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தெறி படத்தின்  வெளியீட்டை  ஒத்திவைப்பதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். மேலும் புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.