விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியலான “அய்யனார் துணை” தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து வருகிறது.

இந்த சீரியலில் சோழன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக, காயத்ரி என்ற பாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஆயிஷா. கதையின் போக்கில் இவர்களது காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது நிஜ வாழ்க்கையிலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சீரியலில் நடித்த நடிகை ஆயிஷாவிற்கும், நடிகர் சல்மானுக்கும் இடையே மலர்ந்த காதல், தற்போது திருமணத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

சமீபத்தில் நடிகை ஆயிஷா மற்றும் நடிகர் சல்மான் ஆகிய இருவருக்கும் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. சீரியல் செட்டில் தொடங்கிய இவர்களது நட்பு காதலாக மாறி, இப்போது பெரியோர்களின் சம்மதத்துடன் திருமணத்தில் முடியவுள்ளது.

இந்த ஜோடியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “திரையில் பார்த்த ஜோடி நிஜத்திலும் இணைவது மகிழ்ச்சி” என ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை மழையாகப் பொழிந்து வருகின்றனர்.